Wednesday, October 5, 2016

ஆசானே......!

இன்று என்னிடம் விருட்சமாயிருக்கிறது
அன்று நீவீரிட்ட பிச்சை.......

ஏட்டை கையில் கொடுத்து
ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாதென
கற்றுத்தந்தவரும் நீவீரே...!



அழுதுக் கொண்டு
அகரம் படிக்க வந்தபோது
அணைத்து, நின் முந்தாணையால்
அன்புடன் துடைத்துவிட்டவளும் நீவீரே.....!

எதைத்தான் கற்றுக் கொடுக்கவில்லை,
ஏற்றிக்கொள்ள எனக்குத்தான்
உரைக்கவில்லை:

ஒவ்வொரு பெயரோடு
ஒரே பதவியோடு
வௌ;வேறுரு கொண்டு
வந்துப்போனாலும்,
வார்த்ததென்னவோ எம் அறிவைத்தான்

எப்படிச் சொல்வேன் நன்றியென
இதுவும் நீ தந்த
இரவல் வார்த்தையல்லவோ? மன்னித்துவிடு
இதைக் கொண்டே இயம்பிவிடுகிறேன்

இந்நிலை நானெய்த
நீவீர்
அட்சயப்பாத்திரம் கொண்டு
அட்சரம் கற்பித்ததே காரணம்
அடிபணிகிறேன் ஆசானே!

நீவீர் வழங்கியதை மெருகூற்றி
நானும் வழங்குவேன்,
நாளைய தலைமுறைக்கு...!
இதுவே நானுனக்களிக்கும்
குரு - தட்சணை

Tuesday, September 20, 2016

மலையக பெண்கள்  சந்திக்கும்  சவால்கள்

மலையகச் சமூகத்தில் என்றுமே ஹீரோ, ஹீரோயின் இரண்டுமே பெண்கள் தான். இதை ஏற்றுக்கொள்வது ஆண்களுக்கு கஸ்டமாக இருந்தாலும் உண்மை இதுதான். என்றும் பெண்ணின் பொறுமைக்கும் சகிப்புதன்மைக்கும் உதாரணமாக இருப்பவர்கள் இந்த மலையகப் பெண்கள் தான். மலையகச் சமூகத்தின் கடுகளவு முன்னேற்றத்திற்கு வழிவகுத்திருப்பதும் இந்த பெண்கள் தான். அத்தகு பெண்களுக்கான பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சுயமுன்னேற்றம் என்பது எந்தளவில் உள்ளது என்று பார்த்தால், அவை கேள்விக்குறியே. என்னத்தான் பெண்கள் அத்தனை பொறுப்பையும் சுமந்துக்கொண்டு இருந்தாலும் குடும்பத்தின் முக்கிய முடிவெடுப்பது என்பது அக்குடும்பத்தலைவர் எனும் ஆண்களின்பால் தான் இருக்கின்றது. இது மலையகத்தின் மறைமுக ஆணாத்திக்கதிற்கான ஒரு உதாரணம். மலையகத்தை பொறுத்தவரை பெண் என்பவள் வலிமையானவளாகவும் ஆண் என்பவன் ஆதிக்கம் செலுத்துபவனாகவும் காணப்படுகிறான்.

Monday, June 13, 2016

பரவாதிருக்கட்டும் குற்றவியல் நோய் வரும் தலைமுறைக்கும்


வளர்ந்துவரும் உலகில் கூடவே வளர்கிறது குற்றவியலும். தினம் தினம் படிக்கும் செய்தித் தாளில்களில் தனக்கென்று ஒரு இடம்பிடித்துவிட்டது இக்குற்றவியல். “”ச்செ... என்ன பிறவியோ....” என்று அலுத்துக் கொண்டு
கடந்து செல்லும் நமக்கு தெரிவதில்லை, நாளை என் சம்பந்தப்பட்ட செய்தி கூட இதில் அடங்கலாம் என்று. இன்று நடக்கும் குற்றங்களில் முக்கால்வாசி
நம்மோடு நமக்கு மத்தியில் சாதாரணமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களாலேயே மேற்கொள்ளப்படுகிறது.

காவல்துறைக்குள் ஒரு கறுப்பு ஆடா?



சித்திரை புதுவருடக் கொண்டாட்டத்தில் நாடே திளைத்திருந்த வேளையில் லக்கலயில் ஒரு திருட்டுச் சம்பவம் இடம்பெற்றதாக ஓர் செய்தி கிடைத்திருந்தது. என்ன ஏது என்று ஆராயப்பட்டபோது காவல்நிலையத்திலேயே களவு போய்விட்டதா? அதுவும் பாதுகாப்புப் பெட்டகத்தில் பூட்டி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகளா? என்று வாய்பிளக்க வைத்துவிட்டது இச்சம்பவம்.

சவால்களில்தான் உள்ளது சந்தர்ப்பம்


ராஃபோர்ட் என்கிற நகரம், அமெரிக்காவின் மிஸிசிப்பி மாநிலத்தில் உள்ளது. அங்கே வளர்ந்துவந்த இளைஞனின் தந்தை, கட்டிடங்கள் கட்டுவதற்கு செங்கல் சுமக்கும் கூலியாளாக வேலைபார்த்தார். விடுமுறைக் காலங்களில் அப்பாவுக்கு உதவியாய் இந்த இளைஞனும் போவான். கனவுகள் சுமக்கும் கல்லூரி மாணவனுக்கு செங்கல் சுமப்பதொன்றும் சந்தோஷமான வேலையல்ல.

நீங்கள் விரும்புவதும் நினைப்பதுவும் ஒன்றா?

நீங்கள் விரும்புவதும் நினைப்பதுவும் ஒன்றா? இதை உறுதிப்படுத்தினால் அந்நிகழ்வு நிச்சயம் நிறைவேறும். இது ஒரு ரகசியம் அல்ல.

ஓடிக்கொண்டு இருக்கும் இந்த வாழ்கையில் ஒவ்வொரு கணமும் உங்களால் தீர்மானிக்கப்பட்டு உருவாக்கப் பட்டுக்கொண்டே ஓடுகிறது. நிச்சயமாக உங்களின் வாழ்க்கை வேறு ஒரு சக்தியால் தீர்மானிக்கப்படவில்லை. இதை நம்புவது அல்லது ஏற்றுக் கொள்வது மிகவும் கடினமான காரியம்தான்.

பொலிஸ்மாதிபரின் முதலும் இறுதியுமான நேர்காணல்



பொலிஸ் பணி என்பது சமூகப் பணி, என மாற்றமடைய வேண்டும் இன்று நாம் அத்தகைய மாற்றத்துக்கான வழியில் சென்று கொண்டிருக்கின்றோம். மேலும் அரசியல் வாதிகளிடம். மக்கள் செல்ல பொலிஸார் தனது கடமையை செய்யாமையே காரணம். அரசியல் வாதிகளிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டுமென்ற அவசியம் எமக்கில்லை. ஆனால் அரசியல்வாதிகளுக்கு பொலிஸாரின் செயற்பாடுகளில் தலையிட அதிகாரம் உண்டு என 34 ஆவது பொலிஸ்மா அதிபராக பதவியேற்றுக் கொண்ட பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார்.

மேலும், இந்த நேர்காணலும், ஊடக சந்திப்புமே எனது இறுதியானது எனவும் அவர் தெரிவித்தார்.

ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவரது முதலும் இறுதியுமான அந்த
நேர்காணல் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.