Wednesday, October 5, 2016

ஆசானே......!

இன்று என்னிடம் விருட்சமாயிருக்கிறது
அன்று நீவீரிட்ட பிச்சை.......

ஏட்டை கையில் கொடுத்து
ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாதென
கற்றுத்தந்தவரும் நீவீரே...!



அழுதுக் கொண்டு
அகரம் படிக்க வந்தபோது
அணைத்து, நின் முந்தாணையால்
அன்புடன் துடைத்துவிட்டவளும் நீவீரே.....!

எதைத்தான் கற்றுக் கொடுக்கவில்லை,
ஏற்றிக்கொள்ள எனக்குத்தான்
உரைக்கவில்லை:

ஒவ்வொரு பெயரோடு
ஒரே பதவியோடு
வௌ;வேறுரு கொண்டு
வந்துப்போனாலும்,
வார்த்ததென்னவோ எம் அறிவைத்தான்

எப்படிச் சொல்வேன் நன்றியென
இதுவும் நீ தந்த
இரவல் வார்த்தையல்லவோ? மன்னித்துவிடு
இதைக் கொண்டே இயம்பிவிடுகிறேன்

இந்நிலை நானெய்த
நீவீர்
அட்சயப்பாத்திரம் கொண்டு
அட்சரம் கற்பித்ததே காரணம்
அடிபணிகிறேன் ஆசானே!

நீவீர் வழங்கியதை மெருகூற்றி
நானும் வழங்குவேன்,
நாளைய தலைமுறைக்கு...!
இதுவே நானுனக்களிக்கும்
குரு - தட்சணை