Monday, June 13, 2016

பொலிஸ்மாதிபரின் முதலும் இறுதியுமான நேர்காணல்



பொலிஸ் பணி என்பது சமூகப் பணி, என மாற்றமடைய வேண்டும் இன்று நாம் அத்தகைய மாற்றத்துக்கான வழியில் சென்று கொண்டிருக்கின்றோம். மேலும் அரசியல் வாதிகளிடம். மக்கள் செல்ல பொலிஸார் தனது கடமையை செய்யாமையே காரணம். அரசியல் வாதிகளிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டுமென்ற அவசியம் எமக்கில்லை. ஆனால் அரசியல்வாதிகளுக்கு பொலிஸாரின் செயற்பாடுகளில் தலையிட அதிகாரம் உண்டு என 34 ஆவது பொலிஸ்மா அதிபராக பதவியேற்றுக் கொண்ட பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார்.

மேலும், இந்த நேர்காணலும், ஊடக சந்திப்புமே எனது இறுதியானது எனவும் அவர் தெரிவித்தார்.

ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவரது முதலும் இறுதியுமான அந்த
நேர்காணல் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.


பொலிஸ்மா அதிபராக பொறுப்பேற்றுள்ள நீங்கள்  இனிவரும் காலத்திற்கான நீங்கள் திட்டமிட்டிருக்கும் செயற்றிட்டங்கள் யாவை?;

குற்றத்துக்கான நிவாரணம் வழங்குதல் மற்றும் தீர்வு என்றவிடயத்தில்.
இதுவரையிலுள்ள நூற்றுக்கு எண்பது வீதமான குற்றங்களுக்கு தீர்வைக்காண
நடவடிக்கை எடுத்தல்.குற்ற நிவாரணத்திற்கென சில கொள்கைகள் இருப்பினும் பாராதூரமான குற்றங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
நாட்டினுள்ளே குழுக்களினால் மேற்கொள்ளப்படும் குற்றங்களை குறைத்தல்
மேலும் குற்றங்களை குறைப்பதற்காக பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்ப வளங்களை அதிகரிக்கும் திட்டமுள்ளது.

வீதிப் பாதுகாப்புஎன்பதில் வீதி ஒழுக்கங்களை கடைப்பிடிக்க வலியுறுத்துதல்.
தினம்தினம் நடக்கும் வீதி விபத்துக்களை குறைப்பதற்கான வழி வகை களை
கண்டறிந்து செயற்படுத்தல்.மற்றும் அதற்கு வீதி தொடர்பான
தொழில்நுட்பங்களை பயன்படுத்தல்.வாகன நெரிசலை குறைப்பதற்கான வழிகளை மேற்கொள்ளல். என்பன முக்கியமாக கணக்கெடுக்கப்படும்.

போதைப் பொருள் பாவனையில் இருந்து நாட்டை காப்பாற்றல் என்ற விடயத்தில்....

ஒரு பரந்தளவிலான செயற்றிட்டத்தை நாம் முன்னெடுக்கவுள்ளோம். இது தொடர்பாக ஏனைய பிரதி பொலிஸ்மா அதிபர்களுடனும் போதைப்பொருள்  தடுப்பு பிரிவுடனும் கலந்தாலோசிக்கவுள்ளோம். மேலும், போதைப்பொருள் தடுப்புப் தொடர்பாக ஜனாதிபதி தற்பொழுது மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளுக்கும் பாரிய ஒத்துழைப்பை வழங்கவுள்ளோம்.
இப்பொழுது மேற்கொள்ளும் செயற்றிட்டங்களை மேலும் செம்மைப்படுத்தவுள்ளோம்.
போதைப்பாவனையிலிருந்து மீட்கப்பட்டோரின் விகிதாசாரம் சார்ந்த திட்டமொன்றையும் முன்னெடுக்கவுள்ளோம். அத்திட்டமானது கண்டறிதல், தடுத்தல், வழக்கு எனும் மூன்று பிரிவுகளை உள்ளடக்கியதாக அமையும்.

பொலிஸ் மற்றும் பொதுமக்களுக்கு இடையிலான தொடர்பாடலை

விருத்தி செய்ய அனைத்து பொலிஸ் தொடர்பாடல் சேவைகளையும்
நாடுபூராகவும் பரப்புதல்
எல்லா பொலிஸ் பிரிவுகளிலும் அனைத்து வசதிகளையும் கொண்ட தற்காலிக பொலிஸ் நிலையமொன்றை ஒரு மாதத்திற்கு மாத்திரம் அமைத்தல்என்பன முக்கியமாக கொள்ளப்படும்.

இந்த தற்காலிக பொலிஸ் நிலையமானது ஆறு விடயங்களை மையப்படுத்தி அமைக்கப்படவுள்ளது.
 சமயம் சார்ந்த நடவடிக்கைகள்,
 சுகாதார நடவடிக்கைகள்,
 கல்வி நடவடிக்கைகள்,
 விளையாட்டு சார்ந்த செயற்பாடுகள்,
 கலாசார நடவடிக்கைகள்,
 சிரமதான நடவடிக்கைகள், என்ற அடிப்படையில் அமைக்கப்படும்

ஏதேனும் ஒரு வேலையை திறம்பட செய்தல் மூலம் அவ்வேலையினை செவ்வனே செய்ய முடியும். பொலிஸ் நிலையத்தில் உள்ளவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயற்பட்டாலே இத்திட்டம் ஜெயிக்கும் சிவில் பாதுப்புக் குழுவில் உள்ளவர்களும் எம்முடன் இணைந்து இத்திட்டத்தை செயற்படுத்துவர். ஒரு கிராமசேவக பிரிவின் கீழ் 25 சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் இருக்கின்றனர். அவர்கள் தகுதியானவர்களாக இருப்பார்களாக இருந்தால் அவர்கள் தொடர்ந்தும் சேவையில் இருப்பார்கள். வேறேதும் குறிக்கோளோடு அவர்கள் இச்சேவையில் இருப்பார்களாயின் வேலையை விட்டு விலகிவிட வேண்டும். அல்லது விலக்கிவிட வேண்டும். சிரமதான நடவடிக்கை எனும் போது அதில் சமூகவிருத்திக்கான செயற்பாடுகள் உள்ளடங்கலாக இருக்கும்.

சரியாக இயங்கக்கூடிய குழுக்களை வைத்து இனி வரும் செயற்பாடுகள்
நடைபெறும். இவ்வனைத்து செயற்றிட்டங்களை அமுல்படுத்துவதற்கு மக்களும் ஊடகங்களும் எமக்கு உதவும் என நம்புகிறோம்.

இலங்கை பொலிஸின் தற்போதைய நோக்கம் என்ன? அதை எவ்வாறு அடையப்போகின்றீர்கள்?

குற்றம் மற்றும் வன்முறைகளற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்குவதே  எமது நோக்கம். அச்சமின்றி வாழக்கூடிய ஒரு சுற்றுப்புறச் சூழலை உருவாக்குவதே எமது முக்கிய செயற்பாடாகும். உண்மை மற்றும் அறிவுசார்   தகவல்களின் அடிப்படையில் செயற்படுகின்ற தொழில்சார் பொலிஸ்துறை என்பதே எமது புதிய இலக்காகும். இவ் இலக்கை அடைவதற்கான வழியை நாம் இப்படிச் சொல்லலாம் செயற்பாட்டு பொலிஸ்பணி என்பதில் இருந்து சமூக  பொலிஸ்பணி என மாற்றமடைந்துள்ளது. இந்த வழியில் நாம் போவதற்கான வண்டிதான் சிவில் பாதுகாப்புக் குழு. இவற்றை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பூரண ஆசிர்வாதம் கிடைத்திருக்கின்றது என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன். (ஙிஞு டச்திஞு tணி தீடிtட tடஞு ஞிணிட்ட்தணடிtதூ ச்ணஞீ tடஞு ஞிணிட்ட்தணடிtதூ ண்டணிதடூஞீ தீடிtட tடஞு  ணீணிடூடிஞிஞு)  நாம் மக்களோடு கைகோர்த்திருக்க வேண்டும். மக்கள் எம்மோடு இருத்தல் வேண்டும். இதுவே எமது இனிவரும் திட்டம்.

ஊடகங்களுக்கான தகவல் வழங்கல் மற்றும் பாதுகாப்பு விடயங்களில் ஏதேனும் மாற்றம் ஏற்படுமா?

ஊடகங்களுக்கு நாம் எதையும் மறைக்க மாட்டோம். உண்மையான தகவல்களை
நாம் வழங்குவோம். ஆனால் புலனாய்வானது இரகசியமாகவே நடைபெறும். ஊடகவியலாளர்களாகிய நீங்கள், மக்கள் சேவையில் உள்ளவர்கள். உங்களுக்கு ஏதேனும் ஆபத்து நேராதவகையில் நாம் நிச்சயம் பாதுகாப்போம். அவ்வாறு நேரும் பட்சத்தில் அது தொடர்பான துரித நடவடிக்கைகள் எடுக்கப்படும் என
நாம் உறுதியளிக்கின்றோம். மேலும், இதுவே எனது முதலும் இறுதியுமான ஊடகவியலாளர் சந்திப்பு என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இனிவரும் காலங்களில் பொலிஸûக்குள் அரசியல் குறுக்கீடுகள் இருக்குமா?

அரசியல்வாதிகளுக்கு பொலிஸாரின் செயற்பாடுகளில் குறுக்கிட அதிகாரம் இருக்கிறது. நாம் சரியாக நமது கடமையை செய்யாவிட்டால்தான் மக்கள் அவர்களிடம் செல்வார்கள். நாம் நம் கடமையை சரியாக செய்தால் சரி. அதுபோல் அரசியல்வாதிகள் சொல்பவற்றை எம்மால் செய்யமுடியாது என்றால் முடியாது என்று சொல்லிவிட வேண்டும். அதைவிடுத்து அரசியல் வாதிகளிடம் நல்லபேர் வாங்கப் போனால் பின் .பிரச்சினைதான். இனிவரும் காலங்களில் அரசியல் பிரமுகர்களின் வழிகாட்டல்கள் தான் இருக்குமேயொழிய தலையீடுகள் இருக்காது.

நிதி விசாரணைப் பிரிவு சட்டத்திற்கு விரோதமாக நடக்கின்றதால் அதனை மூடவேண்டுமென எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர் அது உண்மையா?

இனிவரும் காலங்களில் மேலும் பல வளங்களுடன் இப்பொலிஸ் தலைமையகம் நிச்சயம் நன்றாக பணியாற்றும். இது மக்களின் மற்றும் நாட்டின் முக்கிய தேவை. யார்யாரோ கூச்சலிடுவதனால் இதில் ஒன்றும் மாறப்போவதில்லை.

நிதி விசாரணை பிரிவு, அரசியல் பழிவாங்கலுக்காக சில அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக ஒரு கருத்து நிலவுகிறதே?

இல்லை. அப்படி எந்த அவசியமும் எமக்கில்லை. குற்றம் யார் மீதுள்ளதோ அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படும். எமக்கு புகார் கிடைத்தது. அதன்படியே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தாஜுதீன் வழக்கு விசாரணை எந்த நிலையில் உள்ளது?

அதன் விசாரணைகள் படிப்படியாய் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய முழுமையான விசாரணை முடிவுபெற்றதும் சம்பந்தபட்ட நபருக்கு தண்டனை கிடைக்கும். அது யாராக இருந்தாலும் சரி.

உங்கள் பதவியேற்பின் பின்னணியில் அரசியல் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் கம்மன்பில கூறினாரே...

இக்கருத்தை அவர்தானே கூறுகிறார் ஆகவே இதை நீங்கள் அவரிடமேதான் கேட்கவேண்டும்.

No comments:

Post a Comment