Sunday, June 12, 2016

சுயவிருத்தியே வெற்றிக்கு முதல்படி

தனி நபர் திறன்(Interpersonal Skills)

ஒவ்வொரு தனிநபரின் பழக்கவழக்கங்கள், மனநிலை,குணாதிசயங்கள்,தோற்றம் மற்றும் 
நல்லொழுக்கங்கள் போன்றவை அவர்களை சூழ்ந்துள்ள சமுதாயத்தினையும் உள்ளடக்கியுள்ளது.தனிநபர் திறன் என்பது ஒவ்வொருவரின் பழக்கவழக்கங்கள், மனநிலை,குணாதிசயங்கள்,தோற்றம் மற்றும் நல்லொழுக்கங்கள் போன்றவற்றினை எவ்வாறு மேம்படுத்துகிறோம் என்பதேயாகும்.


தனிநபரின் திறனானது குடும்ப உறுப்பினர்கள்,நண்பர்கள் மற்றும் இந்த உலகத்தை கவனிக்கும் விதத்திலும் அமைகிறது.தொலைக்காட்சி,சினிமா போன்றவையும் தனிநபர் திறன் வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்துகின்றன.மேலும் பேசும் திறனை,மற்றவரிடமுள்ள நட்புறவை மேம்படுத்துகிறது.

தொடர்பு திறன்(Communication Skills )

ஒருவரோடுஅவருக்கு ஏற்ப பேசுவது என்பது ஒரு தனித் திறனாகும். பய உணர்வு,கோபம் மற்றும் மன அழுத்தத்துடன் உள்ளவர்களிடம் பேசுவதும் ஒரு தனித் திறனே. ஏனெனில் அவர்களிடம் 
பேசும் போது நம்மையும் மீறி கோவப்பட்டால் நம் பேசும் திறன் குறைந்து, ஏதாவது
பேசிடுவோம். 

இத் திறனை மேம்படுத்தும் வழிமுறைகள்

பேசுவதற்கு முன்பு எப்பொழுதும் அடுத்தவர் என்ன பேசுகின்றனர் என்பதை நன்கு கவனிக்க வேண்டும்.
பொதுவாக பெரும்பாலானவர்கள் அடுத்து என்ன பேசுவது என்று தான் யோசிக்கின்றனர்.அதை விட்டு,அடுத்தவர் பேசுவதை நன்றாக கவனித்தாலே நன்கு பேசலாம்.
அடுத்தவர் பேசுவதற்கு பதில் கொடுக்கலாம்,பதிலாக வருவதை எதிர்க்க வேண்டாம்.
ஏதாவது சந்தேகம் இருந்தால் தெளிவு பெற்று பின் பேச வேண்டும்.அவ்வாறு செய்யும்        போது தான் அவர்கள் பேசுவதற்கு மாற்றுக் கருத்து இருந்தாலும் முறையாக எடுத்துக்         சொல்ல முடியும்.


உறுதியாகப் பேசுதல்(Assertiveness)

நம் எண்ணங்களையும். உரிமைகளையும் உறுதியாக வெளிப்படுத்தும் திறனே உறுதியாகப் பேசுதல் ஆகும்.அப்படி உறுதியாகப் பேசும் போது அடுத்தவரின் உரிமைகளை மீறவும் கூடாது.இப்படி வெளிப்படையாகவும், நேர்மையாகவும்,நேரடியாகவும் பேசும் போது நம் தனித்தன்மை நன்கு வெளிப்படும். இவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகமாக இருப்பதோடு அவர்கள் பணி செய்யும் வட்டத்திலும் அவர்களின் மதிப்பு உயரும்.

மாற்றுக்கருத்து வேறுபாடு (Types of Conflicts)

மாற்றுக் கருத்துகள் உருவாகும் போது,நிறைய புதிய விடயங்களை உருவாக்கலாம்.
ஒரே குழுவினில் உருவாகும் போது,பிரச்சினைகளைத் தீர்த்து ஒற்றுமையை அதிகப்படுத்தலாம்.
இவ்வாறு பிரச்சினைகளைத் தீர்க்கும் போது,விருப்பத்தோடும்,மன நிறைவோடும் மற்றும் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கும் ஆளாகின்றனர்.
மாற்றுக் கருத்துகளை ஏற்றுக் கொள்ள ...
திறந்த மனதுடையவராக இருத்தல்
அடுத்தவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்வது
அடுத்தவர்களையும் சரிசமமாக பார்ப்பது
அடுத்தவரின் மீது மரியாதையுடனும்,இரக்கத்துடனும் நடந்து கொள்வது

கோவத்தை கட்டுப்படுத்துதல்

கோவத்தை கட்டுப்படுத்துவதே மிகச் சிறந்தது.இதனைக் கட்டுப்படுத்துவதால நம்முடைய குறிக்கோளை எளிதாக அடைய முடிகிறது, அவசரநிலையையும், பிரச்சினைகளையும் எளிதாக சமாளிக்கவும் முடியும். அடக்கிவைக்கப்படும் கோவத்தாலும அதிக தீய விளைவுகள் தான் ஏற்படுகின்றன. விஷயங்களை எடுத்துக் கொள்ளும் முறை,ஒழுக்கம் மற்றும் யோசிக்கும் திறனையும் பாதிக்கிறது.மேலும் இரத்தக் கொதிப்பு,தலை வலி,தோல் வியாதிகள்,செரிமாணக் குறைபாடுகளையும் ஏற்படுத்துகிறது. கட்டுப்படுத்த முடியாத கோவத்தால் தான் கொலை, குற்றம் போன்ற வேண்டாத விளைவுகள் ஏற்படுகின்றன.

கோவத்தை கடுப்படுத்தும் முறைகள்

கோவம் ஏன் வருகிறது என்று யோசிப்பதை விட, எதனால் வருகிறது என்று உணரவேண்டும்.(பதற்றம்,தலைவலி) உண்மையாக நம்மை பாதிப்பது எது என்பதை அறியவேண்டும்.
கோவம் வரும் போது, அந்த இடத்தை விட்டு வெளியேறுவது,அமைதியாக இருப்பது,மூச்சை இழுத்து விடுவது,அமைதியான இடத்திற்கு செல்வது போன்றவை............
கோவப்படும் போது நாம் நடந்து கொள்ளும் முறை, நம் கோவத்திற்கு நாமே தான் காரணம் என உணர வேண்டும். நம் கோவத்திற்கு காரணமானவரிடம் பேசி புரியவைக்க வேண்டும்.அவர் கோவப்படும் போது நடந்து கொள்ளும் முறை உங்களை எப்படி பாதிக்கிறது என்பதைத் தெளிவுப்படுத்த வேண்டும்.

இது போல் மேலே உள்ள செயல்களை செய்யும் போதும்,முறையாக உடற் பயிற்சி செய்யும் போதும், நமக்கு பிடித்த ஏதாவது விடயங்களில் நமது கவனத்தை திசை திருப்பக் கற்றுக் கொள்ளும் போதும் நம்மால் நம்முடைய தனிநபர் திறனை வளர்த்துக் கொள்ள முடியும்.

No comments:

Post a Comment